ஜாலியன் வாலாபாக் நினைவு தின பேரணி


ஜாலியன் வாலாபாக் நினைவு தின பேரணி
x
தினத்தந்தி 15 April 2021 6:47 PM IST (Updated: 15 April 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஜாலியன் வாலாபாக் நினைவுதின பேரணி நடந்தது.

தூத்துக்குடி, ஏப்:
ஜாலியன் வாலாபாக்கில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையிலும் தூத்துக்குடியில் தேசிய மாணவர் படை (கடற்படை பிரிவு) சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி நடந்தது. பேரணி தூத்துக்குடி ரோச் பூங்கா முன்பு இருந்து தொடங்கியது. பேரணிக்கு தமிழ்நாடு தேசிய மாணவர் படையின் கடற்படை பிரிவு கமாண்டர் சுரேஷ் ராமரெட்டி தலைமை தாங்கினார். பேரணி புனித லசால் மேல்நிலைப்பள்ளி வழியாக சென்று காமராஜ் கல்லூரியில் முடிவடைந்தது.
பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு, கொரோனா விழிப்புணர்வு மற்றும் ஜாலியன் வாலாபாக் சம்பவம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பேரணியில், கடற்படை உதவி கமாண்டர் நிஷாந்த் சிங் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story