கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் 110 படுக்கைகள் தயார்


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் 110 படுக்கைகள் தயார்
x
தினத்தந்தி 15 April 2021 7:42 PM IST (Updated: 15 April 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் 110 படுக்கைகள் தயாராக உள்ளது.

ஊட்டி

ஊட்டியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் 110 படுக்கைகள் தயாராக உள்ளது.

போதுமான படுக்கைகள்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 38 பேருக்கு தொற்று உறுதியானது. இதையொட்டி ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த வார்டுகள் உள்ள பகுதிகளில் மற்ற நோயாளிகள், பொதுமக்கள் செல்லாமல் இருக்க ‘தனிமைப்படுத்தப்பட்ட வார்டு’ என்று அறிவிப்பு ஒட்டப்பட்டு இருக்கிறது. மேலும் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்த மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆக்சிஜன் வசதி

கொரோனா நோயாளிகளுக்கு 3 வேளைகளும் சத்தான உணவுகள் கொடுக்கப்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், வைட்டமின், ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மன அழுத்தம் ஏதேனும் ஏற்படாமல் இருக்க பல்வேறு அறிவுரைகளை டாக்டர்கள் வழங்கி வருகின்றனர்.

ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருவதால், தற்போது செயல்பட்டு வரும் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மருத்துவகல்லூரி டீன் மனோகரி கூறியதாவது:-
ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 421 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. 

தற்போது தொற்று உறுதியான 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 110 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

மூச்சு பயிற்சி

கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன. பாதிப்பு தீவிரமானால் சிகிச்சை அளிப்பதற்காக ஐ.சி.யூ வார்டில் 25 படுக்கைகள் உள்ளன. 76 வெண்டிலேட்டர்கள் உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. 

பொதுமக்கள் அச்சமில்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தினமும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு மூச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story