திருப்பூரில் கனரக லாரி மோதியதில் 2 மின்மாற்றிகள் ரோட்டில் சரிந்து விழுந்தன. 4 மின்கம்பங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன.
திருப்பூரில் கனரக லாரி மோதியதில் 2 மின்மாற்றிகள் ரோட்டில் சரிந்து விழுந்தன. 4 மின்கம்பங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன.
திருப்பூர்
திருப்பூரில் கனரக லாரி மோதியதில் 2 மின்மாற்றிகள் ரோட்டில் சரிந்து விழுந்தன. 4 மின்கம்பங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன.
லாரி மோதி மின்மாற்றிகள் விழுந்தன
திருமுருகன்பூண்டியில் இருந்து திருப்பூர் வரும் வழியில் உள்ள பாலத்தின் அருகே மின்மாற்றி உள்ளது. நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அந்த வழியாக வந்த கனரக லாரியின் மேல்பகுதி மின்கம்பி சிக்கி இழுத்தது.
இதில் ரோட்டோரம் நின்ற மின்மாற்றி அடியோடு சரிந்து விழுந்தது. இதுபோல் அருகில் இருந்த மற்றொரு மின்மாற்றி மற்றும் 4 மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. ஏற்கனவே அந்த பகுதியில் மின்தடை இருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் பற்றி அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் அந்த பகுதிக்கு சென்று சரி செய்தனர்.
லாரி ஓட்டுனர் மீது வழக்கு
இதனால் வேலம்பாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து அம்மாபாளையம், திருமுருகன்பூண்டி செல்லும் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டதால் திருமுருகன்பூண்டி பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. பின்னர் நேற்று காலை மின்மாற்றியை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட கனரக லாரியின் விவரங்களை தெரிவித்து திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் மின்வாரிய அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். மின்மாற்றி சேதத்துக்கான பணத்தை லாரி ஓட்டுனரிடம் இருந்து திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story