பேராசிரியர்கள் செல்ல தி.மு.க.வினர் எதிர்ப்பு


பேராசிரியர்கள் செல்ல தி.மு.க.வினர் எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 April 2021 10:32 PM IST (Updated: 15 April 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

மின்னணு எந்திரங்கள் வைத்திருந்த அறை அருகில் பேராசிரியர்கள் செல்ல தி.மு.க.வினர் எதிர்ப்பு தொிவித்தனா்.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மயிலம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்கள் திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 20 பேர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருந்த அறையின் அருகில் சென்றனர். இதை பார்த்த தி.மு.க. முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது பற்றி அறிந்ததும் திண்டிவனம் சப்-கலெக்டர் டாக்டர் அனு நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது பேராசிரியர்கள், ஆன்லைன் வகுப்பு நடத்த வந்ததாக தெரிவித்தனர். அதற்கு சப்-கலெக்டர் அனு, தற்போது பல்கலைக்கழக வளாகம் தேர்தல் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் அருகில் செல்லக்கூடாது. மேலும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வு நடத்துவதற்கு மாற்று இடம் வழங்குவது குறித்து கலெக்டரிடம் பேசி தெரிவிப்பேன். இங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாரிடம் அடையாள அட்டையை காண்பித்த பிறகே பல்கலைக்கழகத்திற்குள் வர வேண்டும். தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது என்றார். 
இந்த சம்பவத்தால்  கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story