வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 15 April 2021 10:35 PM IST (Updated: 15 April 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

சாயர்புரம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

சாயர்புரம், ஏப்:
சாயர்புரம் அருகே உள்ள வலசாகாரன்விளையை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 59). இவர் தூத்துக்குடியில் உள்ள அஞ்சலகத்தில் தபால்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய சகோதரர் தனபால் (56). இவர் முன்னாள் எல்லைப் படை வீரர். இவர்கள் வீட்டின் அருகே சக்கம்மாள்புரத்தை சேர்ந்த வேதமாணிக்கம் மகன் சின்னத்துரை (36) என்பவருடைய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் பாஸ்கர், தனபால் ஆகியோர் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை போடுவார்களாம். இதனை சின்னதுரை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர், தனபால் ஆகிய இருவரும் சேர்ந்து சின்னதுரையை அரிவாளால் வெட்டினர். இதில் காயம் அடைந்த அவர், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிந்தா வழக்குப்பதிவு செய்து, பாஸ்கர், தனபால் ஆகியோரை கைது செய்தார்.

Next Story