வங்கியில் திடீர் தீ விபத்து
வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை,ஏப்.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள வணிக வளாகத்தின் 2-வது மாடியில் அரசு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அலுவலர்கள் பணிமுடிந்து வழக்கம் போல் வங்கியை பூட்டி சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென்று வங்கியில் இருந்து கரும்புகை வெளிவந்தது. அப்போது அந்த பகுதியில் பல்வேறு கடைகளில் காவலுக்கு இருந்த காவலாளிகள் அதனை பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மதுரை மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி வினோத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுவதும் அணைக்கப்பட்டது. ஆனாலும் வங்கியின் முக்கிய ஆவணங்கள், கணினி, மின்விசிறி உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. வங்கியில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story