சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் குந்தவேல்முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. முன்னதாக வேத கோஷங்கள் முழங்க குந்தவேல் முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் சங்கராபுரம் சாலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், செம்பராம்பட்டு முருகன், குளத்தூர் ஆறுமுகப்பெருமான், ராவத்தநல்லூர் சக்திமலை முருகன், பொரசப்பட்டு முருகன் உள்ளிட்ட சங்கராபுரம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story