கச்சிராயப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபருக்கு தர்மஅடி


கச்சிராயப்பாளையம் அருகே  மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபருக்கு தர்மஅடி
x
தினத்தந்தி 15 April 2021 5:31 PM GMT (Updated: 15 April 2021 5:31 PM GMT)

கச்சிராயப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபருக்கு தர்மஅடி

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள நல்லாத்தூர் கிராமத்தில் புத்துப்பட்டு மாரியம்மன் கோவிலில் 8-வது நாள் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறவில்லை. மேலும் திருவிழாவுக்காக போடப்பட்ட கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
அப்போது மர்ம நபர் ஒருவர் கோவில் அருகே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பின்னால் துரத்தி சென்று அந்த மர்மநபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் நரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சிவகுமார்(வயது 45) என்பதும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த சிவகுமார் மீண்டும் தனது கைவரிசையை காட்டி போலீசாரிடம் சிக்கிக்கொண்டதும் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு சிவகுமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். Next Story