உளுந்தூர்பேட்டை அருகே நர்சிங் மாணவி சாவில் திடீர் திருப்பம் கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் உள்பட 3 பேர் கைது


உளுந்தூர்பேட்டை அருகே  நர்சிங் மாணவி சாவில் திடீர் திருப்பம் கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 April 2021 11:09 PM IST (Updated: 15 April 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே நர்சிங் மாணவி மர்ம சாவில் அவரது கள்ளக்காதலனே கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உளுந்தூர்பேட்டை

நர்சிங் மாணவி

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி மகள் சரஸ்வதி(வயது 18). நர்சிங் டிப்ளமோ படித்து வந்த இவரும், அதே ஊரை சேர்ந்த ரங்கசாமி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரஸ்வதிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். 

மர்ம சாவு

இதற்கிடையே சம்பவத்தன்று சரஸ்வதி அவரது வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரஸ்வதியின் மர்ம சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே சரஸ்வதியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சரஸ்வதியை கொலை செய்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

காதலன் சிக்கினார்

அப்போது சரஸ்வதியின் காதலன் ரங்கசாமி தலைமறைவாகி இருந்ததை தெரிந்து கொண்ட போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். 
நீண்ட விசாரணைக்கு பின்னர் ஆந்திரமாநில எல்லையில் பதுங்கி இருந்த ரங்கசாமி, அவரது நண்பர் ரவீந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

கழுத்தை இறுக்கி கொலை

இதில் சரஸ்வதியை கொலை செய்ததை ரங்கசாமி ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில் சம்பவத்தன்று இரவு சரஸ்வதியின் வீ்ட்டின் பின்புறம் வந்த ரங்கசாமியிடம் தனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளதால் தன்னை மறந்துவிடும்படி சரஸ்வதி அவரிடம் கூறினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ரங்கசாமி துப்பட்டாவால் சரஸ்வதியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதற்கு ரங்கசாமியின் நண்பர் ரவீந்திரன் மற்றும் சிறுவன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

3 பேர் கைது

விசாரணைக்கு பிறகு ரங்கசாமி, ரவீந்திரன் மற்றும் சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 




Next Story