மேலும் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டம்


மேலும் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டம்
x
தினத்தந்தி 15 April 2021 11:20 PM IST (Updated: 15 April 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் மேலும் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு உள்ளதாக சப்-கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் மேலும் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு உள்ளதாக சப்-கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார். 

இதில் கொரோனா சிகிச்சை மையங்கள் மீண்டும் அமைப்பது மற்றும் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

கூட்டத்தில் தாசில்தார்கள் தணிகவேல், வெங்கடாச்சலம், துணை தாசில்தார் ஜெயசித்ரா, அரசு ஆஸ்பத்திரி மருத்துவ இருப்பிட அதிகாரி சுரேஷ் ஜோசப், கோட்டூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் ராஜா, தெற்கு ஒன்றிய மருத்துவ அதிகாரி ராஜ்குமார், நகராட்சி நகர்நல அதிகாரி ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இது குறித்து சப்-கலெக்டர் வைத்திநாதன் கூறியதாவது:-

20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகா பகுதிகளில் ஏற்கனவே 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

 இதை தொடர்ந்து இந்த வாரத்திற்குள் மேலும் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. 

அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும். லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் ஆட்டோ, வாடகை கார்கள் ஓட்டுபவர்கள் என்று 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 

மேலும் விடுபட்ட வியாபாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதை தவிர அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story