சுயேச்சை வேட்பாளரிடம் ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டல்


சுயேச்சை வேட்பாளரிடம் ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டல்
x
தினத்தந்தி 15 April 2021 5:51 PM GMT (Updated: 15 April 2021 5:51 PM GMT)

சுயேச்சை வேட்பாளரிடம் ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் அருகில் தேவிபட்டினம் ரோட்டில் வசித்து வருபவர் நாகசுந்தரம் மகன் சூர்யபிரகாஷ் (வயது48). இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மற்றும் திருவாடானை ஆகிய சட்டமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தல் முடிந்ததும் இவர் தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றாராம். அங்கு அவரின் செல்போனுக்கு அழைத்த நபர் அவரின் தாய் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசினாராம். இதனால் மனம் உடைந்த சூர்ய பிரகாஷ் அதுகுறித்து விசாரித்தபோது ரூ.12 லட்சம் கொடுக்கவில்லை என்றால் கடத்தி கொலை செய்து விடுவோம் என மிரட்டினார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்ய பிரகாஷ் ராமநாதபுரம் பஜார் போலீசில் நீலகண்டி ஊருணி அய்யா மகன் காளிதாஸ் மற்றும் மர்ம நபர் மீது புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து செல்போன் அழைப்பு குறித்து சைபர்கிரைம் உதவியுடன் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Next Story