தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு


தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 15 April 2021 11:26 PM IST (Updated: 15 April 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு பகுதியில் தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு நடந்தது.

கிணத்துக்கடவு

தீயணைக்கும் பணியில் ஈடுபட்டபோது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தீயணைப்பு தொண்டு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது. 

இதையொட்டி கிணத்துக்கடவு பஸ்நிலையம், பொன்மலை வேலாயுதசாமி கோவில் பஸ்நிறுத்தம் உள்ளிட்ட பல இடங்களில் தீயணைப்பு நிலைய அதிகாரி காளிமுத்து தலைமையில் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கூறும்போது, சமையல் செய்யும்போது ஆடையில் தீ பிடித்தால் ஓடாமல் தரையில் படுத்து உருள வேண்டும். 

மின்சார தீ விபத்து ஏற்படாமல் இருக்க தரமான மின் உபகரணங்களையும், ஒயர்களையும் பயன்படுத்துவது அவசியம். 

வீடுகளை பூட்டிவிட்டு வெளியே செல்லும்போது மெயின் சுவிட்சை ஆப் செய்துவிட்டு செல்வதுடன் இன்வர்ட்டர் மற்றும் பேட்டரிகளை கவனமுடன் பராமரிக்க வேண்டும் என்றார்.


Next Story