மாட்டுவண்டியில் மணல் கடத்தியவர் கைது
மாட்டுவண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி அருகே ஜமீன் ஆத்தூர் குடகனாறு பாலம் அருகில் மாட்டுவண்டியில் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் ஜெயாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அரவக்குறிச்சி அருகே ஈசநத்தம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த முனியாண்டி (வயது 43) என்பவர் மாட்டுவண்டியில் மணல் கடத்தி கொண்டிருந்தார். இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி, முனியாண்டியை பிடித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, முனியாண்டியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story