கொரோனா பரவல்: களக்காடு தலையணை இன்று முதல் மூடல்
கொரோனா பரவல் காரணமாக களக்காடு தலையணை இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
களக்காடு:
கொரோனா பரவல் காரணமாக களக்காடு தலையணை இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா
களக்காடு தலையணையில் கோடை காலம் என்பதால் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் 2-ம் கட்ட கொரோனா தொற்று பரவி வருவதால் தலையணையில் கொரோனா தடுப்பு விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.
சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிந்து வர வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்பட்டு வந்தது. 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக களக்காடு தலையணையை மூட மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தலையணை மூடல்
அதன்படி களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின் பேரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை தலையணை தற்காலிகமாக மூடப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில் வனப்பகுதிக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story