பயிர்கள் சேதம் குறித்து தகவல் தெரிவிக்கலாம்


பயிர்கள் சேதம் குறித்து தகவல் தெரிவிக்கலாம்
x
தினத்தந்தி 15 April 2021 11:46 PM IST (Updated: 15 April 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை ஒன்றியத்தில் பலத்த காற்றுக்கு பயிர்கள் சேதமாகி இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என்று வேளாண்துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

பொள்ளாச்சி

ஆனைமலை ஒன்றியத்தில் பலத்த காற்றுக்கு பயிர்கள் சேதமாகி இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என்று வேளாண்துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். 

பலத்த காற்றால் பயிர்கள் சேதம் 

ஆனைமலை ஒன்றியத்தில் வாழை, நெல், காய்கறி பயிர்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஒன்றியம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் பலத்த காற்று காரணமாக ஆத்துப் பொள்ளாச்சி, மார்ச்சநாய்க்கன்பாளையம், ஒடையகுளம், பெரியபோது பகுதிகளில் தென்னை, வாழை மரங்கள் சாய்ந்தது. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டது.

அதிகாரிகள் அறிவிப்பு 

இது குறித்து தகவல் அறிந்த ஆனைமலை வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பயிர் சேதம் குறித்து ஆய்வு நடத்தினார்கள். அத்துடன் இழப்பீடு வழங்க வலியுறுத்தி அரசுக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது. 

இதற்கிடையே பலத்த காற்றுக்கு பயிர்கள் சேதமாகி இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என்று வேளாண் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். இது குறித்து ஆனைமலை வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-

தகவல் தெரிவிக்கலாம் 

பலத்த காற்றுக்கு பயிர்கள் சேதமாகி உள்ளது. அவற்றுக்கு காப்பீடு செய்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் இழப்பீடு வழங்கப்படும். 

எனவே இதுவரை ஆய்வு செய்யாத விவசாய விளைநிலங்களில் பயிர்கள் சேதமாகி இருந்தால் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் விளைநிலங்களுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story