வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவ வீரர்கள் 92 பேருக்கு கொரோனா பரிசோதனை
நெல்லையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவ வீரர்கள் 92 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவ வீரர்கள் 92 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
துணை ராணுவம்
நெல்லையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இதில் 2 கம்பெனிகளை சேர்ந்த 92 துணை ராணுவ வீரர்கள் மட்டும் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரிசோதனை
இவர்களுக்கு கொரோனா பரவி உள்ளதா? என்பதை கண்டறியும் வகையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையொட்டி சுகாதார துறையினர் அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு சென்றனர்.
அவர்கள் கவச உடை அணிந்து, துணை ராணுவ வீரர்களுக்கு சளி மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெரியவரும். இதில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு அடுத்த கட்டமாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி
இதற்கிடையே இந்த துணை ராணுவ வீரர்களுக்கு ஏற்கனவே முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நெல்லைக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு 2-வது கட்ட தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story