தோட்டக்கலை துறை செயல்படுத்தும் திட்டங்கள் கலெக்டர் ஆய்வு செய்தார்


தோட்டக்கலை துறை செயல்படுத்தும் திட்டங்கள் கலெக்டர் ஆய்வு செய்தார்
x
தினத்தந்தி 15 April 2021 6:28 PM GMT (Updated: 15 April 2021 6:28 PM GMT)

தோட்டக்கலை துறை செயல்படுத்தும் திட்டங்கள் கலெக்டர் ஆய்வு செய்தார்

எஸ்.புதூர்
எஸ்.புதூர் ஒன்றியம் தர்மபட்டி கொண்டபாளையம் ஊராட்சியில் தேசிய தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு நடத்தினார். இதில் இடையபட்டி கிராமத்தில் உள்ள தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிப்பம் கட்டும் அறை, காய்கறி சாகுபடி திட்டத்தில் பயிர் ஊக்கத்தொகை, நிழல் வலைக்கூடம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நிரந்தர பந்தல் தோட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தினார். இதைதொடர்ந்து கொண்டபாளையம் கிராமத்தில் தர்மபட்டி ஊராட்சி உழவர் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார். ஆய்வின்போது சிவகங்கை தோட்டக்கலை துணை இயக்குனர் அழகுமலை, எஸ்.புதூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ரேகா, சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story