7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நத்தை ஓடுகளை தரம் பிரிக்கும் பணி


7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நத்தை ஓடுகளை தரம் பிரிக்கும் பணி
x
தினத்தந்தி 16 April 2021 12:22 AM IST (Updated: 16 April 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நத்தை ஓடுகளை தரம் பிரிக்கும் பணி நடந்தது

திருப்புவனம்
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இப்பகுதியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் பாசிகள், மணிகள், சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுக்கள், சேதமுற்ற நிலையில் பானைகள், மண் கிண்ணங்கள், பழங்கால வெள்ளை பாசிகள் மற்றும் மண் தட்டுக்கள் ஆகியவை கிடைத்துள்ளன. கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் பல கிடைத்துள்ளன. குறிப்பாக வாய்ப்பகுதி மூடிய நிலையில் முழுமையான முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது. அகரத்தில் சேதமுற்ற நிலையில் மண் பானைகளும் பிறகு தானியங்களை சேகரித்து வைக்கும் மண் குலுமையும் கிடைத்துள்ளது. மேலும் அகரத்தில் நத்தை ஓடுகள் அதிகமாக கிடைத்துள்ளன. அவற்றை பெரிது, சிறிது என தனித்தனியாக தரம் பிரித்து கவரில் சேமித்து வைத்து எடை போடும் பணி  நடைபெற்று வருகிறது.

Next Story