தீயில் உடல் கருகி கணவன்-மனைவி சாவு
சிம்னி விளக்கு தவறி விழுந்ததில் கணவன்-மனைவி உடல் கருகி உயிரிழந்தனர்.
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கெண்டையம்பட்டியை சேர்ந்தவர் சம்சுதீன்(வயது 34). இவரது மனைவி ரெஜினாபேகம்(28). இவர்களுக்கு 2 பெண், 1 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சம்சுதீன்-ரெஜினாபேகம் மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது மின்தடை ஏற்பட்டிருந்ததால் வீட்டில் உள்ள ஜன்னலில் சிம்னி விளக்கை ஏற்றி வைத்திருந்தனர். அப்போது லேசாக காற்று வீசியதால் ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த சிம்னி விளக்கு ரெஜினாபேகம் மீது விழுந்து சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் பற்றி எரிந்தது. வலியால் அலறி துடித்த மனைவியை சம்சுதீன் காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பற்றி எரிந்தது. இதை கண்ட அவர்களது 3 குழந்தைகளும் அலறியவாறு வெளியே ஓடி வந்தனர்.தீயில் உடல் கருகிய கணவன்-மனைவி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருந்தாலும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

Related Tags :
Next Story