3 பேருக்கு தொற்று ஏற்பட்ட தெருப்பகுதி தகரத்தால் அடைப்பு
அரியலூரில் ஒரே நாளில் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேருக்கு தொற்று ஏற்பட்ட தெருப்பகுதி தகரத்தால் அடைக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட பகுதியில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் நகர பகுதியில் உள்ள சாக்கோட்டை தெருவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த பகுதியை நகராட்சி ஊழியர்கள் தகரத்தினால் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் துப்புரவு பணியாளர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்றது. கொரோனாவின் 2-வது அலை பரவி வரும் நிலையில் முதன்முறையாக தெருப்பகுதி தகரத்தினால் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா ெதாற்று பரவலை தடுக்கும் விதமாக தெரு அடைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் நோய்த்தொற்றில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story