ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு


ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 April 2021 2:13 AM IST (Updated: 16 April 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த பலத்த மழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த பலத்த மழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. 
பரவலாக மழை 
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலை அடிவாரப்பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பரவலாக மழை பெய்தது.
ஏற்கனவே கடந்த 2 மாதமாக கொளுத்தும் வெயில் மற்றும் தொடர்ச்சியான மழை இல்லாத காரணத்தினால் வறண்டு போயிருந்த நீரோடைகளில் இந்த மழையினால் மழை நீர் ஓட தொடங்கியது. 
நீர்வரத்து அதிகரிப்பு 
 தொடர்ச்சியாக மழை பெய்தால் அடிவார பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் தண்ணீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 
திடீரென பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. 

Next Story