கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 16 April 2021 2:16 AM IST (Updated: 16 April 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் விருதுநகர் வி.வி.எஸ். திருமண மண்டபத்தில் மாவட்ட சுகாதார அமைப்பினர், விருதுநகர் வியாபார தொழில் துறை சங்கம் மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகியவை இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமினை நடத்தின. இதில் விருதுநகரில் உள்ள வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், பொதுமக்கள் என 80 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை விருதுநகர் வியாபார தொழில்துறை சங்கம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், உதவி பொறியாளர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story