கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 438 ஊழியர்கள்
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 438 ஊழியர்கள் ஈடுபட உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோவை
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 438 ஊழியர்கள் ஈடுபட உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 2-ந் தேதி எண்ணப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அன்றைய தினம் வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த பணியில் 438 அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சுற்றுகள் விபரம்
கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 20 மேஜைகளும், மற்ற 9 தொகுதிகளுக்கும் 14 மேஜைகளும் வாக்கு எண்ணிக்கைக்கு அமைக்கப்படுகின்றன.
ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 438 பேர் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுகின்றனர்.
மேலும் அதிகபட்சமாக கோவை வடக்கு தொகுதியில் 35 சுற்றுகள், குறைந்தபட்சம் வால்பாறை தொகுதியில் 21 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story