தந்தையை தாக்கிய மகன் கைது


தந்தையை தாக்கிய மகன் கைது
x
தினத்தந்தி 16 April 2021 2:19 AM IST (Updated: 16 April 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் தந்தையை தாக்கிய மகனை கைது செய்தனர்.

விருதுநகர்,
விருதுநகர் கணபதி நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 64). பணி ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியரான இவரது மகன் வீர மணிகண்டன் (33). மதுப்பழக்கத்திற்கு அடிமையான வீர மணிகண்டன் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது தந்தை லட்சுமணனிடம் சொத்தை பிரித்து தருமாறு கூறி அவரை அரிவாளால் தாக்கி படு காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் பஜார் போலீசார் வீரமணிகண்டனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story