மாணவிகளுக்கு விவசாய தொழில்நுட்ப பயிற்சி
காரியாபட்டியில் மாணவிகளுக்கு விவசாய தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
காரியாபட்டி,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு வேளாண்மை பட்டப்படிப்பு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக காரியாபட்டி வருவாய் கிராமங்களில் பணி அனுபவம் மற்றும் பயிற்சிகளை பெற்று வருகின்றனர். காரியாபட்டி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராணி தலைமையில் வேளாண் அலுவலர் முருகேசன் முன்னிலையில் மாணவிகள் விவசாயிகளின் வயல்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்கள் பயிரிடும் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர். விரிவாக்க சீரமைப்புத்திட்டத்தின் கீழ் இயங்கும் பண்ணைப் பள்ளியில் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அவர்களின் வயல்களிலே செயல்முறையாக தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியோடு கற்றுத்தருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குரண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பாக்யராஜ் வயலில் பயிரிடப்பட்டிருந்த ஜெ.சி.எல் நெல் ரகத்தை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேசுடன் சென்று பார்வையிட்டனர். நெல்லில் பொக்கு விதை, பூச்சி, நோய் பாதிப்பில்லாத விதைகளை தேர்வு செய்து விதைக்கும் தொழில்நுட்பமான உப்பு கரைசல் முறையை செயல்முறையாக மாணவிகள் வித்யா, அன்புபாரதி, தனசேகரி, கவிதா, நந்தினி, வர்ணிஷா செயல்முறை விளக்கமாக எடுத்துரைத்தனர். மேலும் குரண்டி கிராம விவசாயிகளின் வயல்களில் பயிரிடப்பட்டிருந்த பாகற்காய், வெள்ளரிக்காய், வெண்ைடக்காய் ஆகிய தோட்டங்களையும் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story