இளநிலை பொறியாளருக்கு கொரோனா
திருப்பூரில் நகராட்சி இளநிலை பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்
திருப்பூரில் நகராட்சி இளநிலை பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இளநிலை பொறியாளருக்கு கொரோனா
திருப்பூர் காங்கேயம் ரோட்டை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர் ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் இளநிலை பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் தினமும் திருப்பூரில் இருந்து பவானிக்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு இருந்தது.
இதன் காரணமாக சந்தேகமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதற்கான பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
அரசு ஊழியர்கள் அச்சம்
இதற்கிடையே பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில் இளநிலை பொறியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பவானியில் உள்ள இளநிலை பொறியாளர் அறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்தனர். தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் அரசு அலுவலகங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவது அரசு ஊழியர்கள் பலரையும் அச்சமடைய செய்துள்ளது.
Related Tags :
Next Story