ஈரோட்டில் ஏ.டி.எம். மையத்தில் புகுந்த பாம்பு
ஈரோட்டில் ஏ.டி.எம். மையத்தில் புகுந்த பாம்பு ஒன்று புகுந்துவிட்டது.
ஈரோடு
ஈரோடு நசியனூர் ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் வளாகத்தில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று முன்தினம் மாலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க சென்றார். அப்போது அந்த ஏ.டி.எம். மையத்தில் சுமார் 3 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று உள்ளே ஊர்ந்து சென்றதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், ஏ.டி.எம். மையத்தில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று பகலில் பாம்பு பிடிக்கும் வாலிபரான யுவராஜாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் ஏ.டி.எம். மையத்துக்கு சென்று தேடி பார்த்தார். மேலும், ஏ.சி. எந்திரத்தையும் கழற்றி பார்த்தார். ஆனால் பாம்பு பிடிபடவில்லை. பாம்பு பிடிபடாததால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் செல்ல தயக்கம் காட்டி வருகிறார்கள்.
Related Tags :
Next Story