பவானி நகராட்சி இளநிலை பொறியாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா


பவானி நகராட்சி இளநிலை பொறியாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 April 2021 4:27 AM IST (Updated: 16 April 2021 4:27 AM IST)
t-max-icont-min-icon

பவானி நகராட்சி இளநிலை பொறியாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பவானி
திருப்பூரை சேர்ந்த ஒருவர் பவானி நகராட்சியில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொண்டார். 
இதேபோல் பவானி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஒருவர், அவருடைய தாய், மனைவி, மகன், அக்காள் மகன் என 5 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டார்கள். இதனால் அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டதில் அந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்குமே கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து 5 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பவானி நகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தார்கள். 

Next Story