தலைவர்களின் பெயர்களை நீக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தலைவர்களின் பெயர்களை நீக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 April 2021 7:27 AM IST (Updated: 16 April 2021 7:27 AM IST)
t-max-icont-min-icon

தலைவர்களின் பெயர்களை நீக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் முத்தரசன் பங்கேற்பு.

பெரம்பூர், 

சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் முக்கிய சாலை மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களை எடுத்துவிட்டு சாலைகளுக்கு புதிய பெயர்களை வைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க பொதுச்செயலாளர் வீரபாண்டியன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது முத்தரசன் பேசும்போது, “தமிழகத்தில் முக்கிய தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட பல தலைவர்களின் பெயர்களை மாற்றி புதிய பெயர்களை வைக்க மத்திய அரசின் கீழ் இயங்கும் நெடுஞ்சாலைத்துறை முனைப்பு காட்டி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும். இல்லாவிட்டால் தலைவர்களின் பெயரை மாற்றி வைக்கப்படும் புதிய பெயர்கள் மீது தார் ஊற்றி அழிப்போம். இதற்காக வழக்குகளை சந்திக்கவும், சிறைக்கு செல்லவும் தயார்” என்றார்.

Next Story