கொரோனா தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவள்ளூர் ரெயில் நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் ரெயில்வே போலீசாருடன் இணைந்து கொரோனா தொற்று பரவல் தடுப்பது குறித்தும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்வுகளை நடத்தினர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் உள்ள ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் நேற்று திருவள்ளூர் ரெயில் நிலைய வளாகத்தில் திருவள்ளூர் ரெயில்வே போலீசாருடன் இணைந்து கொரோனா தொற்று பரவல் தடுப்பது குறித்தும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்வுகளை நடத்தினர்.
ஜெயா கல்வி குழுமங்களின் தலைவர் கனகராஜ் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முககவசம் அணிவது குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றி நடப்பது குறித்தும், ரெயில் தண்டவாளங்களை கடக்கும் நிலை ஏற்படாதவாறு படிக்கட்டுக்களை பயன்படுத்துவது குறித்தும், கல்லூரி மாணவர்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில்
இந்த நிகழ்வுகளை ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சுதா, காளிராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். ரெயில் பயணிகள், பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story