சாலை அமைக்காததை கண்டித்து பாய், தலையணையுடன் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்கள்


சாலை அமைக்காததை கண்டித்து பாய், தலையணையுடன் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 16 April 2021 3:52 AM GMT (Updated: 16 April 2021 3:52 AM GMT)

சாலை அமைக்காததை கண்டித்து பாய், தலையணையுடன் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் 1-வது வார்டுக்கு உட்பட்ட பாவேந்தர் தெரு, பாரதிதாசன் தெரு மற்றும் ராஜம்மாள் தெரு போன்ற பகுதிகளில் புதிதாக சிமெண்டு சாலை அமைக்க ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட ரூ.6 லட்சம் நிதி எங்கே? என கேள்வி கேட்டும், நிதி ஒதுக்கி 6 மாதங்களாகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படாததை கண்டித்தும் அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாய், தலையணையுடன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story