அச்சரப்பாக்கத்தில் பஸ் கவிழ்ந்து 5 பேர் காயம்
அச்சரப்பாக்கத்தில் பஸ் கவிழ்ந்து 2 பெண்கள் உள்பட 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.
அச்சரப்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து அச்சரப்பாக்கம் வழியாக கோட்டை புஞ்சை கிராமத்திற்கு நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அச்சரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் திரும்பும்போது பின்னால் வந்த வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் அரசு பஸ் கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 5 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர்.
இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story