நீடாமங்கலம் அருகே ெரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை


நீடாமங்கலம் அருகே ெரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 16 April 2021 6:29 PM IST (Updated: 16 April 2021 6:29 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே ெரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

நீடாமங்கலம், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் பயத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாவு. இவருடைய மகன் தனசேகர்(வயது21) கூலித்தொழிலாளி. அப்பாவு இறந்து ஒரு வருடமாகிறது. தந்தை இறந்ததில் இருந்து தனசேகர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை காலி பெட்டிகளுடன் சரக்கு ெரயில் நீடாமங்கலம் வழியாக காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தது. வையகளத்தூர் ெரயில்வே கேட் அருகில் சரக்கு ெரயில் சென்ற போது ரெயில் முன் பாய்ந்து தனசேகர் தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் ெரயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தனசேகர் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Next Story