ஊட்டி குன்னூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
ஊட்டி, குன்னூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி
கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா நகரமான ஊட்டியில் வெளியிடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், நகராட்சி சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் சோதனையில் ஈடுபட்டு முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
புதிய கட்டுப்பாடுகள் கடந்த 10-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன் பின்னர் ஊட்டி நகராட்சியில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒரு கடைக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங் அறிவுரையின் பேரில் வருவாய் துறையினர் குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உணவு விடுதிகள், டீக்கடைகளில் முகக்கவசம் அணியாமல் சுற்றிய சுற்றுலா பயணிகள் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் குன்னூர் தாசில்தார் சீனிவாசன், உதவி தாசில்தார் முனீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள் துரைசாமி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் தனி குழுக்களாக பிரிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story