தகட்டூர் அஞ்சலகத்தில் இணையதள சேவை முடங்கியது வாடிக்கையாளர்கள் அவதி


தகட்டூர் அஞ்சலகத்தில் இணையதள சேவை முடங்கியது வாடிக்கையாளர்கள் அவதி
x
தினத்தந்தி 16 April 2021 8:12 PM IST (Updated: 16 April 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

தகட்டூர் அஞ்சலகத்தில் இணையதள சேவை முடங்கியது வாடிக்கையாளர்கள் அவதி.

வாய்மேடு, 

தகட்டூர் அஞ்சலகத்தில் இணையதள சேவை முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.

அஞ்சலகம்

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் கடைத்தெருவில் அஞ்சலகம் உள்ளது. இந்த அஞ்சலகத்தில் சுற்றுவட்டார பகுதிகளான வாய்மேடு, அண்ணாப்பேட்டை, வண்டுவாஞ்சேரி, மருதூர்தெற்கு, பஞ்சநதிக்குளம் மேற்கு, தென்னடார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளும், ஆர்.டி கணக்குகளும், காப்பீட்டு திட்ட வரவு செலவுகளும் இந்த அஞ்சலகத்தில் உள்ளது. தகட்டூர் கடைத்தெருவில் உள்ள இந்த அஞ்சலகத்தின் அருகிலேயே உள்ள பி.எஸ்.என்.எல் இணையதள வசதி கடந்த 15 நாட்களுக்கு மேலாக சரிவர கிடைக்காததால், இந்த அஞ்சலகத்தில் நடைபெறும் அன்றாட பணிகள் முடங்கி உள்ளது.

சரி செய்ய கோரிக்கை

இதனால் வாடிக்கையாளர்கள் கடந்த 15 நாட்களாக அஞ்சலகத்துக்கு வந்து வந்து திரும்பி செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் தங்களது அவசரத் தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் சிரமம் அடைந்து உள்ளனர். எனவே இணையதள குறைபாட்டை சரி செய்து வாடிக்கையாளர்களின் இன்னலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story