மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
கொரோனா பரவல் எதிரொலியாக மாநில எல்லைகளில் தமிழக-கர்நாடகா போலீசார் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களை திருப்பி அனுப்பினார்கள்.
கூடலூர்
கொரோனா பரவல் எதிரொலியாக மாநில எல்லைகளில் தமிழக-கர்நாடகா போலீசார் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களை திருப்பி அனுப்பினார்கள்.
கொரோனா பரவல் எதிரொலி
தமிழகம்-கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்று வர வேண்டும் என கட்டாயப் படுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகளில் தமிழக போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தமிழக -கர்நாடகா எல்லையான கக்கநல்லாவில் இரு மாநில போலீசாரும் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
வடமாநிலங்களில் இருந்து மைசூரு வழியாக நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை மாநில எல்லையில் நிறுத்தி விசாரணை நடத்திய பின்னரே அனுமதிக்கிறார்கள்.
தொடர்ந்து அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி இ- பாஸ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் இல்லாதவர்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
இதே பணியை கர்நாடகா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்பட வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் முழு தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
Related Tags :
Next Story