மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு
மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி முடிதிருத்தும் தொழிலாளர்கள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையிலான அந்த அமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தமிழகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 40 லட்சம் பேர் வாழ்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் மண்டேலா திரைப்படம், முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது. அந்த திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளியை கழிப்பறையை சுத்தம் செய்யும்படி கூறுதல் என்பன உள்பட பல இடங்களில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம். எனவே, மண்டேலா திரைப்படத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மேலும் மருத்துவர் சமூக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அவர்கள் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story