கூடலூர் பந்தலூரில் கொரோனா விழிப்புணர்வு முகாம்


கூடலூர் பந்தலூரில் கொரோனா விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 16 April 2021 8:26 PM IST (Updated: 16 April 2021 8:26 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பந்தலூரில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கூடலூர்

கூடலூர் பகுதியில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து வியாபாரிகள், டிரைவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 கூட்டத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், ஜானகிராமன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். 

அப்போது அவர்கள் கூறுகையில், கொரோனா பரவி வருவதால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து உள்ளார்களா? என வியாபாரிகள் கண்காணிக்க வேண்டும். 

முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்கக்கூடாது. கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியை கடைபிடித்து வாடிக்கையாளர்கள் நிற்பதை உறுதி செய்ய வேண்டும். 

இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். பின்னர் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதாக வியாபாரிகள், டிரைவர்கள் போலீசாரிடம் உறுதி அளித்தனர்.

இதேபோன்று வருவாய்த்துறை சார்பில் பந்தலூர் பஜாரில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது. 

இதில் தாசில்தார் தினேஷ்குமார் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதில் வருவாய் ஆய்வாளர் கிரிஜா, கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story