வால்பாறை நகர் பகுதியில் தொடரும் சிறுத்தைப்புலி நடமாட்டம்
வால்பாறை நகர் பகுதியில் தொடரும் சிறுத்தைப்புலி நடமாட்டம்
வால்பாறை
கடந்த சில நாட்களாக வால்பாறை நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் சிறுத்தைபுலிகள் நுழையும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி அதிகாலையில் திருவள்ளுவர் நகருக்குள் புகுந்த சிறுத்தைபுலி குட்டி ஆட்டை கடித்து கொன்று விட்டு தாய் ஆட்டை கடித்து காயப்படுத்தி விட்டு சென்றது.
மார்ச் 18-ந் தேதி சோலையார் எஸ்டேட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து காயப்படுத்தி விட்டு சென்றது. வனத்துறையினர் 19 ஆம் முதல் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தைபுலியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த 12 -ந் ம தேதி நள்ளிரவில் குடியிருப்பு வழியாக சிறுத்தைபுலி நடந்து வந்தது.
கண்காணிப்பு கேமரா பொறுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் 13 -ந் தேதி முதல் கூண்டு வைத்து சிறுத்தைபுலியை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் 14 -ந்தேதி இரவு 9.15 மணிக்கு எம்.ஜி.ஆ.ர் நகர் சாலையை கடந்து சிறுத்தைபுலி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக தாவிக்குதித்து சென்றது. அங்குள்ள கடையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் அந்த காட்சி பதிவாகியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் அரசு பெண்கள் மாணவியர் தங்கும் விடுதி அருகே உள்ள ஒரு வீட்டின் மதில் சுவரில் சிறுத்தைபுலி அமர்ந்திருந்த காட்சி கேமராவில் பதிவாகியிருந்தது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் சிறுத்தைபுலிகள் நடமாட்டம் வால்பாறை நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், வால்பாறை நகர்ப்பகுதியில் சில நாட்களாகவே சிறுத்தைபுலி நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருவதற்கான காரணத்தை வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தி ஊருக்குள் சிறுத்தைபுலிகள் நுழைவதை தடுப்பதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story