பழனி முருகன் கோவிலில் அமைச்சர் உதயகுமார் சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் அமைச்சர் உதயகுமார் சாமி தரிசனம் செய்தார்.
பழனி:
பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று முன்தினம் இரவு பழனிக்கு வருகை தந்தார். அங்குள்ள ஓட்டலில் தங்கிய அவர், நேற்று அதிகாலை அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியாக நடந்து மலைக்கோவிலுக்கு சென்றார்.
பின்னர் அங்கு கோவிலில் நடந்த பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் மலைக்கோவிலில் உள்ள போகர் சன்னதி, மலைக்கொழுந்து அம்மன் போன்ற இடங்களுக்கு சென்று உதயகுமார் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு படிப்பாதை வழியாக திருஆவினன்குடி சென்று தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர் காரில் புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story