குடிமங்கலம் அருகே பழுதான தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

குடிமங்கலம் அருகே பழுதான தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
x
தினத்தந்தி 16 April 2021 10:29 PM IST (Updated: 16 April 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் அருகே பழுதான தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

குடிமங்கலம்
குடிமங்கலம் அருகே பழுதான தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
பழுதான பாலம்
குடிமங்கலத்தில் இருந்து முத்துச்சமுத்திரம் செல்லும் சாலையில் உப்பாறு ஓடையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் உப்பாறு ஓடையின் வழியாக செல்லும் தண்ணீர் தரைப்பாலத்தை கடந்து அருகில் உள்ள தடுப்பணையில் தேங்கும் வகையில் தற்போது தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து உள்ளது. 
இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த விளை பொருட்களை பாலத்தின் வழியாக கொண்டு செல்கின்றனர். குடி மங்கலத்தில் இருந்து அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக  இந்த சாலை உள்ளதால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பாலம் பழுதாகி உள்ளது தெரியாததால் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.
சீரமைக்க கோரிக்கை
பாலத்தின் இரு பக்கங்களிலும் தடுப்புச்சுவர் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் பாலத்தை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் அருகே தற்போது தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 
ஆனால் பாலம் சீரமைக்கப்படவில்லை. இதனால் பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும். தரைப்பாலத்தின் இருபக்கங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story