ஒரேநாளில் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரேநாளில் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கிணத்துக்கடவு
தமிழகத்தில் கொரோனா தொற்று பலமாவட்டங்களில் வேகமாக பரவிவருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரதுறை தீவிர தடுப்புநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும்பணி கடந்த சிலநாட்களாக நடைபெற்றுவருகிறது.
நேற்று ஒரேநாளில் 200பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதேபோல் கிணத்துக்கடவு பகுதியில் 200 பேருக்கு கொரோனாபரிசோதனை எடுக்கப்பட்டது. நேற்று கிணத்துக்கடவு, பட்டணம், தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் மட்டும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கொரோனா தொற்று எற்பட்டுள்ள பகுதிகளில் தீவிர நோய்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சித்ரா தெரிவித்தார்.
Related Tags :
Next Story