அரசு டாக்டர் வீட்டில் நகை- பணம் திருட்டு


அரசு டாக்டர் வீட்டில் நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 April 2021 10:38 PM IST (Updated: 16 April 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் அரசு டாக்டர் வீட்டில் நகை- பணம் திருடு போனது.

விழுப்புரம், 

விழுப்புரம் அரசு ஊழியர் நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மதியழகன் மகன் கோகுல் (வயது 31). இவர் அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 3-ந் தேதியன்று மாலை இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அரியலூர் சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை இவருடைய வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு திடுக்கிட்ட அவரது பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உடனே இதுபற்றி அரியலூரில் உள்ள டாக்டர் கோகுலுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர், அரியலூரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வந்தார். பின்னர் அவர் தனது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1½ பவுன் நகை, ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப்போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வீடு பூட்டி இருப்பதை அறிந்த யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர் கோகுல், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story