40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்


40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
x

சாலைக்கிராமத்தில் பதுக்கி வைத்த 40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இளையான்குடி, 
சாலைக்கிராமத்தில் பதுக்கி வைத்த 40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் பகுதி அய்யம்பட்டி கிராமத்தில் 40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது. அய்யம்பட்டி கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இளையான்குடி வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன் ரேஷன் அரிசி மூடைகள் பதுங்கி வைக்கப்பட்ட வீட்டை சோதனை செய்தார். இதில் அய்யம் பட்டியைச் சேர்ந்த கோபால் என்பவரது வீட்டில் 40 மூடை ரேஷன் அரிசி இருப்பு வைத்துள்ளதை வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன் பறிமுதல் செய்தார்.
விசாரணை
கைப்பற்றிய ரேஷன் அரிசி மூடைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வைக்கப்பட்டன. யாரும் வசிக்காத வீட்டில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி இருந்ததால் அவர் யார் என்ற விவரம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story