பல்லடத்தில் கொரோனா தடு்ப்பு நடவடிக்கை வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி
பல்லடத்தில் கொரோனா தடு்ப்பு நடவடிக்கை வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி
பல்லடம்
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. முககவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்றுவதால் மட்டுமே கொரோனா தொற்று பரவலை தடுக்க இயலும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பல்லடம் நகராட்சியில் இதுவரை 12 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் கொரோனா நோய் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஏற்கனவே வேறு நோய்கள் உள்ளதா? என்றும் கணக்கெடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story