புகையிலை பொருட்கள் பறிமுதல்
சிவகங்கையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 220 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை,
சிவகங்கையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 220 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல்
சிவகங்கை பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி உத்தரவின் பேரில் சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் அங்கு வந்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த குடோனில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான சுமார் 220 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது.
பறிமுதல்
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம். இந்த புகையிலை பொருட்களை ஆய்வுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story