பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 16 April 2021 10:53 PM IST (Updated: 16 April 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

சிவகங்கை, 
சிவகங்கை-தொண்டிரோடு சீனிவாசா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சங்கீதா (வயது38) கடைக்கு செல்வதற்காக தன்னுடைய மகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவர் சிவகங்கை ரெயில்வே மேம்பாலம் அருகே வரும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சங்கீதாவின் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி  சங்கீதாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர். தகவல் கிடைத்ததும் சிவகங்கை துனண போலீஸ்சூப்பிரண்டு பால்பாண்டி, நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவஇடத்தை பார்வை யிட்டு விசாரணை நடத்தினா். இதுதொடர்பாக சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story