சேவூர் பகுதியில் நுங்கு விற்பனை அமோகம்
சேவூர் பகுதியில் நுங்கு விற்பனை அமோகம்
சேவூர்
சேவூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தாகத்தை சமாளிக்க பொதுமக்கள் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணியை தொடர்ந்து நுங்கு ஆகியவற்றை அதிகளவில் சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் இவற்றின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. சேவூர் சுற்றுவட்டாரப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கொளுத்தும் கோடைக்கு எந்த குளிர்பானங்கள் சாப்பிட்டாலும் தாகத்தை சமாளிக்க முடியவில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பது தான் நமது இயல்பு. ஆனால் மழைக்காலத்தையும், குளிர்காலத்தையும் சமாளிக்க டீ, காபி, பால் முதலியன சூடான பானங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் வெயில் காலத்தை சமாளிக்க ஏராளமான குளிர்பானங்கள், மற்றும் உடல் உஷ்ணத்தில் இருந்து நம்மை பாதுகாக்க இயற்கையாகவே இயற்கையால் நமக்கு சில பொருட்கள் கிடைக்கின்றன.
தற்போது சித்திரை மாதம் தொடக்கத்தில் இருந்து சேவூர் பகுதியில் நுங்கு விற்பனை தொடங்கி விட்டது. ஒரு நுங்கு ரூ.10-க்கும் சிறிய அளவில் கொண்ட நுங்கு 3 ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் இரு வாரம் கழித்து நுங்கு வரத்து அதிகரிக்கும். அதனால் விலையும் ஓரளவு குறையும், வைகாசி மாதம் இறுதி வரை நுங்கு விற்பனை நன்றாக இருக்கும் என்று நுங்கு வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story