ஒரேநாளில் 9 பேருக்கு கொரோனா
பரமக்குடியில் ஒரேநாளில் 9 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
பரமக்குடி,
பரமக்குடியில் ஒரேநாளில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு தடை செய்யப்பட்ட பகுகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தடை
பரமக்குடியில் கொரோனா தொற்றால் 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் பாலன்நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், அந்த வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கும் 2 பேரும், பாரதி நகரில் ஒருவரும், கனி நகரில் 2 பேரும் என மொத்தம் 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உத்தரவு
அப்போது பரமக்குடி நகர் முழுவதும் தீயணைப்புத் துறை மற்றும் ஊராட்சித் துறையை சார்ந்த அலுவலர் களின் ஒத்துழைப்போடு அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் இந்திரா, பரமக்குடி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செந்தில்குமரன், தாசில்தார் தமீம்ராஜா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் செந்தாமரைச் செல்வி, ராஜேந்திரன், தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பாலசுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story