குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு


குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 16 April 2021 11:16 PM IST (Updated: 16 April 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கீழக்கரை, 
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த ராஜீவ் மகன் திவாகர் (வயது23) இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் இவருடைய தந்தை ராஜீவ் நான்கு வருடத்திற்கு முன்பு ஏர்வாடி தர்காவிற்கு தனது மகனை ஆன்மிக மருத்துவத்திற்காக அழைத்து வந்துள்ளார்.நேற்று காலை திவாகர் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுள் ளார். அப்போது தடுப்பு சுவர் அமைக்கப்பட்ட ஏர்வாடி தர்கா பின்புறம் உள்ள குளத்தில் ஏறி குதித்து குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவருக்கு வலிப்பு வந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக திவாகர் உயிரிழந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story